Monday, July 04, 2005

ராகு,கேது யாரு இது?

ராகு மற்றும் கேதுவுக்கு ஜோதிடவியலிலும்,இந்து மதத்திலும் சிறப்பான இடம் உள்ளது.நவக்கிரகங்களில் இந்த இரண்டும்
கோள்களூம் பாம்பாக சித்தரிக்கபடுகிறது.திருஞான சம்பந்த சுவாமிகள் கோளருபதிகத்தில் கீழ்கண்டவாறு பாடுகிறார்.

"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவிமாசறு
திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே"

அதாவது நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று பொருள்.

அறிவியலில் சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களில் இந்த இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேதுவும் இடம்பெறவில்லை.உண்மையில் இவை இரண்டும் நிழல் கோள்கள் என அழைக்கபடுகிறது.

நமக்கு எல்லாருக்கும் தெரியும் பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது அதேபோல சந்திரன் பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.சந்திரனுடைய நீள்வட்டப்பாதை பூமியின் நீள்வட்டப்பாதையை இரண்டு இடத்தில் சந்திக்கிறது.சந்திரன் தெற்க்கிலிருந்து வடக்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும்,வடக்கிலிருந்து தெற்க்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும் சந்திக்கிறது.வடக்கு சந்திப்புக்கு ராகு என்றும், தெற்கு சந்திப்புக்கு கேது என்றும் பெயர்.கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



இந்த புள்ளிகள்தான் சந்திரகிரகணத்தையும்,சூரியகிரகணத்தையும் ஏற்ப்படுத்துகிறது.இப்படி சூரியகிரகணக்காலத்தில் சூரியனுக்கும்,புமிக்கும் இடையே சந்திரன் வருகிறது.இது நமக்கு சூரியன்மீது நிழல் விழுவது போல தோன்றும்.

அக்காலத்தில் இந்த நிகழ்வை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவது போல சித்தரித்தனர்.இந்த நிகழ்வுக்கு காரணமான ராகுவையும் மற்றும் கேதுவையும் பாம்பாக சித்தரித்தனர்.