Friday, January 05, 2007

எது உண்மை?

உங்களுக்கும் எனக்கும் ஒன்றைப் பற்றி வாக்குவாதம் அல்லது தர்க்கம் என்று வைத்து கொள்வோம்.நீங்கள் என்னை விட நன்றாகவாதாடுகின்றிர்கள் என்றால் அதற்கு நீங்கள் சரி, நான் தவறு என்றா அர்த்தம் ஆகும்?.அப்படியில்லாமல் நான் உங்களை விடநன்றாக வாதாடினால் அதற்கு நான் சரி,நீங்கள் தவறு என்றா அர்த்தம் ஆகும்?.இருவர் சொல்வதுமே தவறாகவோ அல்லது இருவர் சொல்வதுமே சரியாகவோ இருக்கலாம்.

இப்படி இருக்க,வேறு யாரிடம் கேட்பது நீங்கள் சரியா அல்லது நான் சரியா என்று?. அப்படியே ஒருவர் உங்களையோ அல்லது என்னையோ ஆமோதிக்கிறார் என்றால் அது அழகல்ல.அப்படியில்லாமல் அந்த ஒருவர் முன்றாவது ஒரு கருத்தையோ அல்லது இருவரது கருத்தையோ அதரித்தால் அவரால் நமக்கு பயனில்லை.

ஆக நம் கருத்து வேறுபாடு தீர்க்கபடாமல் இருக்கும்..

ஆக யாருக்கும் தெளிவான விடை தெரியவில்லை.எந்த ஒரு விசயமும் யாருக்கும் முழுமையாக தெரியாது என்றே முடிவுக்கு வரவேண்டும். ஒரு தெளிவான விடைக்காக காத்திருந்தால் அதற்கு முடிவே இல்லை. உலகின் அனைத்துமே ஒரு பிரபஞ்ச விதியின்படி நடக்கிறது. ஆக நாம் எதையுமே முழுமையாக சரி என்றோ,தவறு என்றோ கூறமுடியாது.

உண்மை - தெளிவாக இருந்தால் மாற்றுக்கருத்துக்கு இடமே இடையாது.

ஆக உண்மை/பொய் என்றோ, சரி/தவறு என்றோ எதையும் தரம் பிரிக்காதிர்கள்.

குறிப்பு : தாவோயீசம் கன்பியுசிசஸ் தத்துவத்திலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.