Friday, June 03, 2005

நம்பிக்கைத்தான் வாழ்க்கை

எந்த ஒரு விஷயத்தையும் தர்க்கரீதியாக நான் அனுகுவேன்.எதையும் முழுமையாக நம்பாமல் ஏன் எதற்கு என்று கேள்வியை எனக்குள்ளே கேட்டு என் மனம் ஒத்துகொள்ளும் வரை அதை ஆராய்வேன்.இப்படி தர்க்கரீதியாக ஒவ்வொரு விஷயத்தயும் அனுகும்போது,ஒரு திருப்திகரமான முடிவு தெரியும் வரை ஆராய்வது ஒரு வித மன அழுத்தத்தை தருகிறது.என்னுடைய இந்த மனப்போராட்டத்தை சரி செய்ய நான் பலமுறை முயன்று இருக்கிறேன்.இந்த பிரச்சினைக்கு மூலகாரணம் நம்பிக்கையின்மைதான் என்று கண்டறிந்தேன்.

அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது "நம்பிக்கைத்தான் வாழ்க்கை" என்ற வழக்குமொழி. நாம் மகிழ்ச்சியாக வாழ அல்லது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ நம்பிக்கை மிகவும் அவசியம்.உண்மையோ பொய்யோ எதையாவது ஒன்றை நம்பவேண்டும் அதுபடி நடக்கவேண்டும்.

எடுத்துக்கட்டாக என் மதநம்பிக்கையை விளக்கவுள்ளேன்.என் தற்போதைய தேடல் உண்மையான உண்மையை தேடுவது.அதாவது கடவுளை ஞானவழியில் தேடுவது.நான் உலகின் பல்வேறு தத்துவஞானிகளின் கருத்துக்கள் அடங்கிய நூல்களை வாங்கி படித்தேன்.இருந்தாலும் இன்னும் தெளிவு பெறவில்லை. இன்றும் என் தேடல் தொடர்கிறது. உண்மையான உண்மையை தேடுவது கடினமான வேலை.ஏதாவது ஒரு மதத்தை அப்படியே நம்பிவிட்டால் இந்த தேடலுக்கு அவிசியம் இருக்காது.

ஒரு நல்ல முகமதியன்,திருகுரானை நம்புகின்றான் மற்றும் 5 வேலை இறைவனை தொழுகிறான்.ஒரு நல்ல கிறுஸ்துவன் இயேசுவை இறைவனாக பார்க்கிறான்.ஒரு நல்ல இந்து அவனுடைய விருப்பம் போல் எண்ணற்ற இந்து கடவுள்களை ஒன்றையோ அல்லது பலவற்றையோ தேர்ந்தெடுத்து வழிபடுகிறான். இப்படி ஒரு இறைவழியை நம்பிவிட்டவர்களுக்கு உண்மை தேடுதல் என்ற மனபோராட்டம் தேவைபடவில்லை.

ஒவ்வொரு தத்துவஞானியும் இப்படி உண்மை தேட ஆரம்பித்து பின்னர் ஒரு தத்துவத்தை உருவாக்கி அதன் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு மன நிறைவு ஏற்பட்டு தங்களுடைய மனபோராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள்.

புத்தர் தனது ஆடம்பர வாழ்கையை விட்டு உண்மையான,மனநிறைவு அளிக்ககூடிய ஒரு விளக்கத்தை தேடி அலைந்தார்.கடைசியில் "ஆசைதான் துன்பத்திற்கு காரணம்" என தொடங்கி 8 வகையான நல்வழியை வழங்கினார்.அவர் கூறியதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் அவருடைய தத்துவத்தை நம்பினார்.முக்தி என்பது ஒரு விஷயத்தை முழுமையாக நம்புவதால் கிடைப்பது என்று எனக்கு இதன்மூலம் புலப்படுகிறது.

அதாவது,சரியோ,தவறோ மக்கள் எதையாவது ஒன்றை நம்புகின்றனர் மற்றும் அதுபடி நடக்கின்றனர்.ஒன்று கடவுளை முழுமையாக நம்பவேண்டும் அல்லது முழுமையாக நம்பகூடாது. ஆனால் இதில் எந்த பிரிவையும் சாராமல் இருப்பதுதான் என்னுடைய பிரச்சனை. சிலர் இந்த உலகம் உருவாக்கப்பட்டது மனிதன் மகிழ்ச்சியாக வாழ என நம்புகின்றனர்.சிலர் இந்த மனிதபிறவி எடுத்தது இறைவனை தேடி அவன் திருவடியை அடைவதற்கு என எண்ணி துறவு மேற்கொள்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிகையோடு வாழ்க்கையை அனுகுகிறார்கள்.நம்பிக்கை வேறுபடுகிறது ஆனால் எல்லொருக்கும் நம்பிக்கை இருக்கிறது.

1 comment:

நற்கீரன் said...

I can understad what you are trying to say...

Good write up.