Monday, June 27, 2005

தொலைநோக்கு பார்வை இல்லாத அரசு

சமீபத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து.இந்த
முடிவு சரியானது என்று பலதரப்பு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த அரசு ஆணையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு கனவோடு, ஒன்று அல்லது இரண்டு வருடங்களை வீண் செய்து இம்ப்ரூவ்மென்ட் தேர்வு மூலம் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தியுள்ளனர்.இன்னிலையில் இந்த அரசு ஆணை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.அதனால் இதனை எதிர்த்து மேற்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து பாமக சார்பிலும், தொழில், கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் படி, மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத் தேர்வை ரத்து செய்த ஜுன் 27,2005 அன்று தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கு ஒன்றை நமக்கு தெளிவாக்கியுள்ளது.இந்த அரசு சரியாக ஆராயாமல் இந்த ஆணையை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஒரு அரசு ஒரு ஆணையை அமலுக்கு கொண்டுவரும்பொழூது அதில் உள்ள சட்ட சிக்கல் ,இதனால் எற்படும் விளைவுகளை பற்றி சரியாக ஆராயவேண்டும்.அனைத்துதரப்பு மக்களை சென்றடையும் விதத்திலும் ,யாரையும் பாதிக்காத வகையிலும் அமையவேண்டும்.

தற்காலத்தில் அனைத்துவகை தொழில்களூம் தரச்சான்றிதழ்கள்(ISO) பெற்று, தங்களுடைய ஒவ்வொரு பணிகளுக்கும் வழிமுறைகளை(Guidelines) வகுத்து பிரச்சனையை முன்னதாகவே கணிக்கும் முறைகளையும் (Risk Management) மற்றும் எதிர்விளைவுகளை பற்றிய தொலைநோக்கும் (Impact Analysis) கொண்டு, அதன்படி சிறப்பாக செயல்படுகின்றன.ஏன் இதை ஒரு அரசு செய்ய தவறியது என்பதே என் கேள்வி.

இத்தகைய அரசின் தவறான முடிவு, துக்ளக் அட்சியில் தொலைநோக்கு பார்வையல்லாது தலைநகர் மாற்றியதற்க்கு ஒப்பாகும்.இது ஒரு மிகைபடுத்திய ஒப்புமை என்றாலும்கூட இதில் சில ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.

நல்ல வேலை இந்த குடியரசு இந்தியாவில் அரசு செய்யும் தவறுகளை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் உள்ளன.

No comments: